லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை:ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

சிறிலங்கா அரச நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என சிறிலங்கா ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆகவே லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகங்களில் லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டல் ஒன்றாக மாற்ற சிறிலங்கா அதிபர் ரணில் யோசனை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

அவ்வாறான எந்த எண்ணமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் தேசிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வரும் லேக் ஹவுஸ் நிறுவனத்தினை விற்பனை செய்வது குறித்து இதுவரை ஜனாதிபதியோ பிரதமரோ எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.’ எனவும் தெரிவித்துள்ளார்.