கனடாவில் கணவனால் கொலை செய்யப்ட்ட ஆசிய நாட்டுப் பெண்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்திய தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, அவரது கணவர் 48 வயதான இந்தர்ஜித் சாந்து என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிந்துள்ளனர்.இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மரணமடைந்த கமால்ஜித் சாந்து என்பவருக்கு 16 மற்றும் 21 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர் எனவும், அவர்கள் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் உள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 88 பெண்கள் அல்லது பெண் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் குடும்ப வன்முறை மற்றும் ஆண்களே கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.