பட்டு புடவையில், கழுத்து நிறைய நகையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் சாணி கயிதம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த சர்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வெளிவந்த வஷி அகிய இரு திரைப்படங்களும் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கிறார்கள்.நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது, பட்டு புடவை அணிந்து, கழுத்து நிறைய நகைகளுடன் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைபடங்கள்..