சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்கள் பிரெண்டன் ஃப்ரேசர், மிஷ்ஷெல் யோ!
உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ப்ரின்டன் ஃபரேஸர் வென்றார். அதாவது, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ’தி வேல்’ படத்திற்காக வென்றார் பிரெண்டன் ஃப்ரேசர். டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கிய மற்றும் சாமுவேல் டி ஹன்டரால் அவரது சொந்த நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரேசர் உடல் பருமனான ஆசிரியராக நடித்துள்ளார். 54 வயதான அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
இதுபோன்று, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘Everything Everywhere All At Once’ திரைப்படத்திற்காக மிஷ்ஷெல் யோ வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார். இதன்பின் பேசிய அவர், கனவுகள் நனவாகும் என்பதற்கு இது ஒரு சான்று. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இதை நான் அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் தான் சூப்பர் ஹீரோக்கள், அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என தெரிவித்தார்.