சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.