மாணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கல்லூரி முதல்வர்.. சிகிச்சை பலனின்றி உயிரிப்பு.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் சான்றிதழ் தர தாமதம் ஆனதால் கல்லூரி பெண் முதல்வரை ஒரு மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தூரில், சிம்ரோல் பகுதியில் உள்ள தனியா மருந்தியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா (24 வயது) என்பவருக்கு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தாமதம் ஆன காரணத்தால், பெண் கல்லூரி முதல்வர் விமுக்தா ஷர்மா (வயது 54) என்பவரை அந்த மாணவன் பெட்ரோல் ஊற்றி ஏரித்துள்ளான்.

இந்த கொடூர சம்பவத்தில் உடலில் 80 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் பெண் முதல்வர் விமுக்தா சர்மா  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மா உயிரிழந்துவிட்டார் என்ற சோக செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை வயர் அதிகாரி குப்தா கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிம்ரோல் பகுதி ஏஎஸ்ஐ சஞ்சீவ் திவாரி அலட்சியமாகவும் மற்றும் விசாரணையை தாமதமாக நடத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.