இலங்கை கடன் தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு.
இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு வழங்கப்படும் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமெரிக்க மற்றும் சீன நிதித்துறை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் G20 நிதி மாநாட்டை ஒட்டி இந்த விவாதம் நடைபெற்றது.
அமெரிக்கா மற்றும் சீனாவின் நிதித்துறை அதிகாரிகளும் இதில் இணைந்திருந்தனர்.
இந்த இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் சீன கடன் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதை அமெரிக்கா தாமதப்படுத்தியதாக அமெரிக்கா விமர்சனம் செய்த பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய கடன் வழங்குனராகக் கருதப்படும் சீனா, G20 நாடுகளை இந்தப் பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்து, திறம்படத் தீர்க்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.