அரச பேருந்து மீது ரயில் மோதி விபத்து-மூவர் காயம்!
பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (20) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணி ரயில் பேருந்து மீது மோதியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.