நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு, திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மை பொறியாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.