படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரிய மனுவொன்றை இன்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘யாழ். ஊடக அமையம்’ சார்பில் அதன் ஊடகவியலாளர்கள் கையளித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இதே கோரிக்கையை ஊடகவியலாளர்கள் விடுத்திருந்ததை ஜனாதிபதிக்கு நினைவூட்டியதுடன் அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் தான் துரித கவனமெடுப்பதாக ஊடகவியலாளர்களிடம் உறுதியளித்தார்.