யாழ்-பாழடைந்த வீட்டில் நடந்த பயங்கரம், 10 பேர் கைது!
யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பகுதியில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த வீட்டில் 10 பேர் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (08-02-2023) இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே முன்னெடுத்தனர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.