லண்டன் கொலின்டேல் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆனந்தராஜா பிரேமகுமாருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வட மேற்கு லண்டன் கொலின்டேலைச் சேர்ந்த 61 வயதுடைய ஆனந்தராஜா பிரேமகுமார், பெப்ரவரி 2ம் திகதி வியாழக்கிழமை அன்று வூட்கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
6 டிசம்பர் 2022 அன்று அதே நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி மீது நான்கு முறை மேற்கொண்ட பாலியல் வன்முறை செயற்பாடுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அக்குடும்பத்திற்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த ஆனந்தராஜா பிரேம்குமார் 2010 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட இளம்பெண்ணை குறிவைத்து துஷ்பிரயோகம் செய்தமை குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இளம்பராயத்தில் அச்சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உளநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே இந்த அதிகாரிகளினால் இவருடைய கமூகச் செயல்கள் கண்டறியப்பட்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே பிரேம் குமார் கைது செய்யப்பட்டார்.
பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட பெண் விசாரணைக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மத்தியிலும் ஆலயங்களின் நலன் செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்த பிரேம் குமார் குற்றவாளின ஆதாரங்களோடு நிருபிக்கப்பட்டார். பிரேமகுமார் 30 ஏப்ரல் 2021 அன்று கைது செய்யப்பட்டபோதும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இருப்பினும் அவருடைய பாலியற்குற்றஙகள் ஆதாரங்களோடு நிருபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 30 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இப்படியான கமுகர்களுடைய குற்றச்செயல்களை சுட்டிக்காட்ட துணிவற்ற தமிழ் சமூகத்தில் அவரை அடையயாளம் காட்ட முன்வந்த இளம் பெண்ணை பொலிசாரும் மனநல ஆலோசர்களும் பாராட்டியுள்ளனர்.. ஆனாலும் இந்த குற்றவாளியை காப்பாற்ற தமிழ்சார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். இதேவேளை உங்களுடைய பெண்குழந்தைகள் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும், இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் தம்மை தொடர்பு கொளளும்படியும் பொலிசார் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.