தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்கு; பதில் 8ம் திகதி முடிவாகும் எனத் தெரிவிப்பு.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற முடிவை அரசாங்கம் நாளை மறுதினம் 8ஆம் திகதியன்று அறிவிக்கவுள்ளதென்று, அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சினால் நாடாளுமன்றத்தில் விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, தேர்தலுக்கான 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் தேர்தலுக்கு வழங்குவதற்கு பணம் இல்லை என்றே அந்த அறிவிப்பு அமையப் போகின்றது என, அந்த உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதனை அடிப்படையாக வைத்தே, தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற அறிவிப்பை அரசாங்கம் நாளை மறுதினம் விடுக்கவுள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றது.