துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் – அமெரிக்கா.
துருக்கி-சிரியாவில் எற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1300க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.துருக்கியில் குறைந்தது 912 பேர்; சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மதிப்பீடுகள், பிராந்தியத்தில் ஏற்பட்ட இதற்கு முந்தைஅய் நிலநடுக்கங்கள், மக்கள்தொகை மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டமைப்புகளின் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கபட்டு உள்ளது.
“இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகளில் வசிக்கின்றனர், இருப்பினும் சில எதிர்ப்பு கட்டமைப்புகள் உள்ளன.” பொருளாதார இழப்புகள் 1 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம், இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை இருக்கும் என்றும் அறிக்கை மதிப்பிடுகிறது. இந்த பேரழிவைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் தலைவர்கள் இரங்கல் மற்றும் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அழிவு குறித்து அமெரிக்கா “ஆழ்ந்த கவலையில் உள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.