இந்தியா வருகிறார் போப்பாண்டவர்.
இந்தியாவுக்கு அடுத்தாண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் அவரின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் அவர் தனது அடுத்த பயணத்திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டார். அதன்பின்னர் மங்கோலியாவுக்கு முதன்முதலாக செல்ல இருப்பதாகக்குறிப்பிட்ட போப் பிரான்சிச் 2024-ம் ஆண்டு இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப் இந்தியா வர உள்ளார்.