சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா வேண்டுகோள்.

 

சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தெற்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடும் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி மத்தியில் சுதந்திரதின கொண்டாட்டம் தேவைதானா என்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்  தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபை இதனை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கின்றது .பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை துக்க நாளாக கரி நாளாக பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள்.

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு  அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும் ஆனால் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகபகிரங்கமாக அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையிலே அது தொடர்பிலே அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரையில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவர்கள் அரசாங்க தரப்பிலே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறை முற்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள்.

எனவே ஐனநாயக போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றவர்கள், தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் ன அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.