உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-மன்னிப்பு கோரிய மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
“நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” என்று அவர் விளக்கமளித்தார்.