இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பிரதமர் ரிஷி சுனைக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனைக் பிரித்தானியாவில் தமிழர் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த வார இறுதியில் தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த காணொளியில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு இந்த பண்டிகை எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன். உங்கள் குடும்பங்களுடன் இணைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டானியாவில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

உங்களது குடும்பங்களுக்கும் இந்த சமுதாயத்துக்குமாக நீங்கள் செய்யும் தியாகங்கள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் மிகப்பெரிய நன்றி. சேவை என்பதன் உண்மையான அர்த்தத்தை உணர்த்தும் விதமாக நீங்கள் நடப்பதற்கு நன்றி.  குறிப்பாக, நமது என்எச்எஸ் இல் உங்கள் சேவைகளிற்காக நன்றி. நேர்மை, கடினம் உழைப்பு, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சூழலிலேயே நானும் வளர்க்கப்பட்டேன். இவற்றையே இங்கிலாந்தின் பிரதமராக நான் எனது கொள்கைகளின் முன்னிலையிலும் மத்தியிலும் வைத்துள்ளேன்.

இந்த நாட்டில், அனைத்தும் மக்களும், நம்பிக்கையும் பெருமையும் எதிர்காலம் தொடர்பான ஒளிமயமான எண்ணங்களையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.  இதன் மூலம் நமது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நாம் ஒன்றிணைந்து சிறந்த ஒரு எதிர்காலத்தினை கட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும். இந்த தைப்பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நலன், மகிழ்ச்சி, செல்வம் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.