16-வது ஆசிய திரைப்பட விருதுவிழாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
வசூல் ரீதியாக 500 கோடிகளுக்கு மேல் செய்து பல சாதனைகள் படைத்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் 16-வது ஆசிய திரைப்பட விருதுகளில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் சிறந்த இசை – ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த எடிட்டிங் -ஸ்ரீகர்.பிரசாத், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -தோட்டா தரணி,சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன், சிறந்த ஆடை வடிவமைப்பு -ஏகலக்கனி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், இதைப்போல ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக ஸ்ரீனிவாஸ் மோகனுக்காகவும், சிறந்த ஒலிக்காக அஷ்வின் ராஜசேகருக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.