தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரையும் உடனடியாக நீக்க வேண்டும்-ஜீ.எல்.பீரிஸ்
தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரையும் உடனடியாக நீக்க வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்து வருகிறது. தேர்தலை நடத்த உண்மையில் நிதி இல்லை என்றால் நாட்டிலுள்ள 39 இராஜாங்க அமைச்சர்களையும் உடனடியாக நீக்க வேண்டும். 39 இராஜாங்க அமைச்சர்களுக்கும் 340 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் எவருமில்லாது நாட்டை ஒரு வருடம் ஆட்சி செய்தார். எனவே, தேர்தலை நடத்த நிதியில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களை நீக்குங்கள்.” எனவும் தெரிவித்தார்.