பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு அம்பர் தீவிர வெப்ப எச்சரிக்கை

பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு அம்பர் தீவிர வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை மூலம் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் மற்றும் பயணத்திற்கு இடையூறு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வியாழன் நள்ளிரவு முதல் ஞாயிறு வரை தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் வெப்பநிலை 35 பாகை செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டில் எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியதில் இருந்து வானிலை அலுவலகம் வழங்கிய மிக நீளமான எச்சரிக்கை அம்பர் எச்சரிக்கையாகும்.

மேலும் இது ஜூலை மாதத்தில் முதல் முறையாக வெப்பநிலை 40பாகை செல்சியசைத்  ஐத் தாண்டிய முதல் சிவப்பு எச்சரிக்கையை விட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.