தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது: பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. தேர்தலை பிற்போட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தவிர மாற்று வழியேதும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா அல்லது அரசியல் சூழ்ச்சிகளினால் தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் மக்க்ள மத்தியில் உள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை இவ்வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அரசியலமைப்பின் பிரகாரம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும். எனவும் அவர் கூறினார்.