142 பொருட்களுக்கு HS குறியீடுகள்.
இறக்குமதி, ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், நேற்று முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.