கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஒன்றுமையினை பாதிக்கும்: மாவை சேனாதிராஜா தெரிவிப்பு.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஒன்றுமையினை பாதிக்கும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் கூடி கலந்துரையாடி இறுதி முடிவை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.தற்போது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ள மாவை சேனாதிராசா மாகாணசபை தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கோரிவருகின்றார்.
அத்துடன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சி.வி.விக்கினேஸ்வரனது கட்சியுடனும் என்.சிறீகாந்தா மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தரப்புடனும் நெருக்கம் காண்பித்து வருகின்றார். அத்துடன் அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது முரண்பாடுகளையும் மாவை சேனாதிராசாவே கையாண்டுவருகின்றார். இந்நிலையிலேயே அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்ளிருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது.