மீண்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சற்று அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதால் காற்றின் தரம் பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும். இதனால் வரும் நாட்களில் நாட்டில் மூடுபனி போன்ற நிலை தோன்றும்.

இலங்கையின் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்தியாவில் இருந்து வீசும் பலத்த காற்றினால் தூசித் துகள்களின் வருகையாகும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலை, வானிலை நிலையைப் பொறுத்து அவ்வப்போது மாறலாம், ஆனால் அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சிறிது அதிகரிக்கலாம் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க காற்று தரக் குறியீடு படி நேற்று கொழும்பின் காற்றின் தரம்  166ஆக இருந்தது, . நீர்கொழும்பு 173, கம்பஹா 165, தம்புள்ளை 137, கண்டி 91, அம்பலாந்தோட்டை 82 மற்றும் நுவரெலியா 41ஆக இருந்தது.

தரவுகளின்படி 150 முதல் 200 வரை காற்றின் தரத்தை கொண்ட பகுதிகள் ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.