பிரச்சினைகளை மூடிமறைக்க நினைப்பது வெறும் கனவு.

இலங்கை சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் போராட்டத்தை அடக்குமுறை ஊடாக கட்டுப்படுத்தி நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை மூடிமறைக்கலாம் என ரணில் – ராஜபக்ச அரசாங்கம் கருதுமெனின் அது வெறும் கனவாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பதன் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது என சமூக ஊடக செயற்பாட்டாளரும் கோட்டா கோ கம போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவருமான ஷசிக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கோட்டா கோ கம போராட்டக்களம் குறித்த வானொலி சேவை ஒன்று தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட ஷசிக திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள் பலர் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலையில் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களை விசாரணை என்ற பெயரில் அடக்குமுறை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஷசிக திஸாநாயக்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.