தேசிய பிரச்சினனத் தீர்வில் மத்தியஸ்தம் வகிக்க போவதில்லை: எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படவில்லை என நோர்வேயின் முன்னாள் சமாதானப் பேச்சுவார்த்தையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.இந்த வாரம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனையவர்களுடன் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சொல்ஹெய்ம், சூழல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக தெரிவித்தார். முன்னதாக, இனப்பிரச்சினை தீர்வின் மத்தியஸ்தர் நிலையை திரும்பப் பெற வேண்டும் என்றும்இ தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தரகர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டமை பற்றி தெரிவித்தஅவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் என்ற விடயங்களைத் தவிர வேறு எதனையும் கலந்துரையாட தமக்கு ஆணை இல்லை என தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சி பேச்சுவார்த்தையில் வெளிநாட்டினரின் பங்கு இருப்பதாக தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேமதாசாவுடனான சந்திப்பின் போது புதுப்பிக்கத்தக்க புரட்சியில் இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக சொல்ஹெய்ம் இந்த வாரம் ட்வீட் செய்திருந்தார்.நோர்வேயின் முன்னாள் சமாதான மத்தியஸ்தர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்தார்.இதன்போது பொருளாதார மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டிற்கும் இலங்கை தீர்வு காணும் நேரம் வந்துவிட்டது என்று சம்பந்தன் தன்னிடம் கூறினார் அதைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்று என்று சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடனும் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார்.