சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பேண வழி.
மனித உடலின் இயங்கு நிலையில் சிறுநீரகங்கள் முக்கியமான உறுப்புக்கள். அவை வடிகட்டிகள் போன்று, இரத்தத்தை வடித்துச்சுத்தம் செய்து கழிவுப் பொருட்களையும் மேலதிகதிரவத்தையும் சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடுகின்றன. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி,உடம்பிலுள்ள திரவத்தினதும் பல்வேறு உப்புக்களினதும் அளவைச் சரிசெய்கின்றன. அத்துடன், எலும்புகளில் கல்சியம் எடுத்துக்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்தும் பல வளர் ஊக்கிகளையும் (ஹோர்மோன்ஸ்) விட்டமின் D யையும் விடுவிக்கின்றன.