ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8வயது சிறுவன் உயிரிழப்பு!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தற்போது குறித்த சிறுவனின் மரணம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் உள்ள போபால் நகரிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெதுல் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த எட்டு வயது சிறுவனின் குடும்பத்திற்கு 400, 000 இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
கடந்த 06ஆம் திகதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயதுச் சிறுவனை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், அச்சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்பது அனைவருக்கும் ஏற்பட்ட பெரும் ஏமாற்றமும் கவலையும் அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.