நானுஓயா பொலிஸாரால் மரம் நடுகை!
செ.திவாகரன்
சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து நானுஓயா பொலிசாரினால் மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது .
இதன்படி நானுஓயா பொலிஸாரால் ,நு/எபற்ஸ்போட் தமிழ் வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்து கடந்த வாரம் நானுஓயா பிரதான வீதி ஓரமாகவும் ,பாடசாலையை சுற்றியும் மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் வீஜிசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிசாரும் , பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.