இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்பின் தலைவருடன் பசில் இரகசிய சந்திப்பு
இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்பின் தலைமை நிர்வாகி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார் என வெளியாகியுள்ள தகவல் கொழும்பு அரசியலில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்பின் தலைமை நிர்வாகி இலங்கைக்கு அண்மையில் இரகசிய பயணமொன்றை மேற்கொண்டார் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசத்திடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,பஸில் ராஜபக்சவை சந்திப்பதற்கு எவருக்கும் தடை இல்லை. அவருடன் எவரும் பேச்சு நடத்தலாம் எனத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னர் அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச, கடந்த 20 ஆம் திகதி நாடு திரும்பினார். அந்த காலப்பகுதியிலேயே றோ பிரதானியும் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார் எனக் கூறப்படுகின்றது.