அரசியல் ரீதியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை : தமிழக முதல்வர் ஸ்டாலின் வங்க முதல்வர் மம்தா தெரிவிப்பு.
நாங்கள் சந்தித்து கொண்டது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் ரீதியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகிய இருவரும் கூறி மறுத்துள்ளனர்.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.இந்த சந்திப்பு முடிந்ததும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்..
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. மேலும், நீங்கள் அவசியம் மேற்கு வங்கதிற்கு வர வேண்டும் என என்னை அழைத்துள்ளார். நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை.’ என திட்டவட்டமாக கூறினார் முதல்வர் ஸ்டாலின். அடுத்ததாக பேசிய மேற்கு வங்க முதல்வர் ஸ்டாலின்,’ முதல்வர் ஸ்டாலின் எனக்கு சகோதரர் போன்றவர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. கவர்னர் அழைப்புக்காக தமிழகம் வந்துள்ளேன். அப்போது இங்கு வந்தேன். என கூறிவிட்டு, தமிழில் வணக்கம் கூறினார் மம்தா.’ இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பற்றி பேசவில்லை.’ என திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார்.