கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து பார்வையிட்டார்.
அதன் பிறகு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர்செய்யப்படும் என தெரிவித்தார்.
அதன் பிறகு, கடந்த காலம் போல அல்லாமல் இந்த வருடம் மழைநீர் வெகு விரைவாக வெளியேற்ற பட்டு வருகிறது என கேட்கப்பட்ட போது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது.
அதனை சரிப்படுத்த சில வருடங்கள் ஆகும். அதனை நாங்கள் (திமுக ஆட்சி) ஒன்றரை வருடத்தில் சரி செய்து வருகிறோம்.’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.