T20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…!

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.

மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதல் சுற்று ஆட்டத்தில் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சயில் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது . இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் முன்சே 1 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் களம் புகுந்தார். ஜோன்ஸ் மற்றும் கிராஸ் இணை சிறுது நேரம் தாக்குப்படித்து ஆடினர். இதில் கிராஸ் 28 ஓட்டத்தில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோன்ஸ்வுடன் கப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றியது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கெல் ஜோன்ஸ் 86 ஓட்டங்கள் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டும், மார்க் அடாய்ர், ஜோசுவா லிட்டில் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பால் ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னெ களம் இறங்கினர். இதில் பால்பிர்னெ 14 ஓட்டங்களும் , ஸ்டிர்லிங் 8 ஓட்டங்களும் , அடுத்து வந்த லார்கன் டக்கர் 20 ஓட்டங்கள் ஹேரி டெக்க்ர் 14 ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு கர்டிஸ் காம்பர், ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிரடியாக ஆடிய காம்பர் தனது முதல் அரைசதம் அடித்து அசத்தினார்.

மேலும் இந்த இனை 100 ஓட்டங்கள் ‘பார்ட்னர்ஷிப்’ அடித்து அசத்தினர். இறுதியில் அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கார்டிஸ் கேம்பர் 72 ஓட்டங்கள் , டாக்ரெல் 39 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவருக் 5 வது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன் மூலம் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.