நேட்டோவின் எல்லைக்கு அருகே, அணு குண்டு வீசும் விமானங்களை ரஷ்யா நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைகோள் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடான நோர்வேக்கு அருகில் உள்ள விமானப்படை தளத்தில், ரஷ்யா 11 அணுசக்தி திறன் கொண்ட நீண்ட தூர குண்டுவீசும் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளதாக நோர்வே இணையதளத்தில் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 7 Tu-160s மற்றும் நான்கு Tu-95 விமானங்கள் ஒலென்யா விமானப்படை தளத்தில் ரஷ்யாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள Tu-160s விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் ரஷ்யா, ஐரோப்பாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது.