இலங்கையர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை சாத்தியம்.
இலங்கை சிஏஏ சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால்ஈ அந்த சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்ததுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் இன் படி, இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் கீழ் இலங்கை குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழகத்தில் திருச்சியில் 1993ஆம் ஆண்டு பிறந்தவர் அபிராமி. இவர் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்தான் வழக்கு தொடர்ந்து இருந்தார். அபிராமி இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, படிப்பு முடித்துள்ளார். இவர் ஆதார் கார்டு போன்றவையும் வைத்துள்ளார்.
இவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைஇ நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் ஒற்றை நீதிபதிஅமர்வின் கீழ் வந்தது. இதனை விசாரித்த, நீதிபதி, இலங்கை விஏஏசட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறியது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைத்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.