இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைக்க தீர்மானம்.
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் குறைக்க INSEE Corporation மற்றும் INSEE Plus ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.