நாளை முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாய் வரை குறைக்கப்படும்
நாளை முதல் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படும் என்று இலங்கை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை சூத்திரத்திற்கு அமைய விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 – 300 ரூபாவுக்கு இடையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.