கொல்கத்தா  விமானக் கடத்தல் மிரட்டல் – ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து!

Meiveli Media Team


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானக் கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் கழிப்பறைக் கண்ணாடியில், ‘விமானம் கடத்தப்படும்’ என்ற அச்சுறுத்தல் வாசகம் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்குத் தகவல் வழங்கினர். விமானி விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விமானம் ஓடுதளத்திலிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து விமானத்தில் தீவிர சோதனைகளை முன்னெடுத்தனர். வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய முழுமையான பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், மிரட்டல் வாசகத்தை எழுதியவர் யார் என்பதைக் கண்டறிய விமான நிலையத்தின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் காவல்துறையினரும் பாதுகாப்பு அமைப்புகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">