மாணவர்களின் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி ரூ.75 கோடி வங்கிக் கடன் மோசடியா? 7,500 பேர் பாதிக்கப்பட்டதாகப் புகார் – சேலத்தில் பரபரப்பு!

Meiveli Media Team


தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் ஆதார் விபரங்களைப் பயன்படுத்தி சுமார் 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டின்படி, பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களது வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும், அந்தப் பணத்தைத் தாங்கள் குறிப்பிடும் கணக்கிற்கு மாற்றினால் ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய மாணவர்கள் தங்களது ஆதார் அட்டைகளை வழங்கியதுடன், வங்கிக் கணக்கிற்கு வந்த பணத்தையும் அவர்கள் குறிப்பிட்ட கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.
ஆனால், பின்னர் தனியார் வங்கியிலிருந்து வந்த கடன் தவணை செலுத்துமாறு கோரும் அறிவித்தலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாடு வாங்குவதற்காகத் தங்களது பெயரில் கடன் பெறப்பட்டுள்ளதாக வங்கியில் விசாரித்தபோதே தெரியவந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோன்று சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 7, 500 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 75 கோடி ரூபாய் வரை கடன் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாணவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">