புதிய தமிழ் கூட்டணியொன்றை உருவாக்க திட்டம்
மேல் மாகாணத்தில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய தமிழ் கூட்டணியொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்னைகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் நடைமுறை பிரச்னைகளும் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதை அடிப்படையாகக் கொண்டு, ஒற்றுமையான கூட்டணி ஒன்றிணை உருவாக்க ஜனநாயக மக்கள் காங்கிரஸ் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேல் மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிக்கின்றமை தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றுள்ளது.இந்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.