எயார்பஸ் இலஞ்ச வழக்கு: நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு நவம்பர் 19 வரை விளக்கமறியல் நீடிப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தில் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அன்றைய தினம் (நவம்பர் 19) அவரைச் சிறையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.