கடும் மழை காரணமாக புண்டலுஓயா – நுவரெலியா பிரதான வீதியில் வீதிப் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடும் மழை காரணமாக புண்டலுஓயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள ‘பரணவத்த’ (Paranawatta) பகுதியில் இன்று காலை பிரதான வீதி உள்வாங்கி (அமிழ்ந்து) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த பிரதான வீதியூடான வாகனப் போக்குவரத்து இன்று காலை முதல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீதியில் முச்சக்கர வண்டிகள் (Tri-wheelers) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் (Bikes) மட்டுமே பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
ஏனைய கனரக மற்றும் பெரிய வாகனங்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

