முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரசாங்கம் மக்கள் மீது சுமத்தியுள்ள கடுமையான வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கக் கோரி முன்னிலை சோசலிசக் கட்சியினர் (Frontline Socialist Party) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப் பேரணியானது பொரளை கெம்பல் விளையாட்டரங்கில் (Campbell Park) இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்றடைந்தது.

அங்கு திரண்ட போராட்டக்காரர்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையைக் குறைக்குமாறும், மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும் கோரி அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.