குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான 5,000 வீடுகள் அக்டோபர் 05 ஆம் திகதி மக்கள் மயமாக்கப்படும்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான 10,000 வீடுகள் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்துள்ள 5,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வரும் அக்டோபர் 05 ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த 10,000 வீடுகள் திட்டத்திற்கு புறம்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள 5,000 வீடுகளை திறந்து வைக்கும் வேலைத்திட்டம் அக்டோபர் 05 ஆம் திகதி எழும் உலக குடியிருப்பு தினத்திற்கு இணைந்ததாக நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

