த.வெ.க. கூட்டணியில் பா.ம.க.? – சவுமியா அன்புமணிக்கு அமைச்சுப் பதவியா?
Meiveli Media Team

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பா.ம.க. த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரான சவுமியா அன்புமணிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன் பின்னர் த.வெ.க. அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பா.ம.க. தற்போது எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்கவில்லை என அறிவித்துள்ள நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை, சவுமியா அன்புமணியிடம் த.வெ.க. அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அவ்வாறான தகவல்கள் வெறும் வதந்தி என்றும், அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், த.வெ.க. மற்றும் பா.ம.க. இடையிலான அரசியல் நகர்வுகள் குறித்து வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

