கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்: பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

Meiveli Media Team


ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை 10 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது பல டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து 08 ம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்போது நான்கு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை இம்மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">