கியர் ஸ்டார்மரின் அமைச்சரவை அறிக்கை குழப்பம் நிறைந்தது.அவதானிகள் கருத்து!
Meiveli Media Team

கியர் ஸ்டார்மர் இன்று காலை அமைச்சரவையில் அளித்த அறிக்கை மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வார இறுதியில் ழுடிளநசஎநச பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நம்பர் 10-ல் மேலும் 10 ஆண்டுகள் இருக்க விரும்புகிறேன்’ என கூறியதாக வெளியான தகவல் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இது முன்னாள் தலைவர்கள் மார்கரெட் தட்சர் மற்றும் பொறிஸ் ஜோண்சன் ஆகியோரின் அதீத நம்பிக்கைப் பேச்சுகளை நினைவூட்டியதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த தேர்தல் வரை தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் நேரடியாக குறிப்பிடாத அதேவேளை நாட்டில் நிலைத்தன்மை முக்கியம் என்பதையும், இதுவரை கட்சியில் எந்த தலைமைச் சவாலையும் தான் எதிர்கொள்ளத்தொடங்கவில்லை என்பதையும் மட்டும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அத்தகைய சவால் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வார் என்பதையும் தனது அறிக்கையில் தெளிவாக கூறயிருக்கவில்லை. இதன் மூலம், அவர் ஒரு வகையில் பதவியில் தொடரும் நோக்கத்தை காட்டினாலும், தலைமை சவால் எழுந்தால் தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய வாய்ப்பையும் பொதுவெளியில் வைத்துள்ளார் என்று கருதப்படுகிறது. அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, இந்த மறைமுக சவால், குறிப்பாக சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கை(Wes Streeting)நோக்கி விடுக்கப்பட்டதாக தெரிகிறது. தலைமை சவாலை தொடங்க தேவையான 81 எம்.பி. ஆதரவை பெறக்கூடிய ஒரே அமைச்சராக ஸ்ட்ரீட்டிங் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.இதுவரை ஸ்ட்ரீட்டிங் நேரடியாக சவால் விடுப்பதை மறுத்திருந்தாலும், தற்போது அவர் அதைத் தொடங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

