3.5 மில்லியன் ரூபாய் செலவில் கந்தளாயில் புதிய கொங்க்ரிட் வீதி .
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI
கந்தளாய் பிரதேசசபைக்குட்பட்ட கோவில் கிராமம் வீதியின் 200 மீற்றர் தூரம் கொண்ட பகுதியை 3.5 மில்லியன் ரூபாய் செலவில் கொங்க்ரீட் வீதியாக அமைக்கும் பணிகள் நேற்று மாலை (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக சேதமடைந்திருந்த கோவில் கிராமம் வீதி மேம்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், குறித்த வீதி அபிவிருத்திப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதிக்குள் முழுமையாக பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

