பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் என வலுக்கும் கோரிக்கை
Meiveli Media Team

வொஷிங்டனுக்கான தூதராக பீட்டர் மாண்டல்சனை நியமித்தது தவறு என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ஒப்புக்கொண்டாலும், குற்றத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்டாமர், இந்த நியமனம் ஒரு தவறுதான் என்றாலும், மாண்டல்சனுக்கு அப்பதவியை வழங்க வேண்டாம் என்ற பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரைகளை வெளியுறவு அலுவலகம் நிராகரித்தது தனக்குத் தெரிந்திருந்தால், அந்த முடிவைத் திரும்பப் பெற்றிருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தவறாக நடத்தப்பட்ட தகுதி சரிபார்ப்பு செயல்முறை தொடர்பாக தனது பதவி விலகலுக்கான கோரிக்கைகளை அவர் நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் ஒரு பெரிய ஊழலாக உருவெடுத்துள்ளதால், அத்தகைய கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதை மறுத்த பிரதமர், வெளியுறவு அலுவலகத்தின் மீது முழுப் பழியையும் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும் இந்த தோல்வியானது பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

